தொடரும் அட்டூழியம்... தமிழக மீனவர்கள் 10 பேர் கைது!
Jan 9, 2025, 09:29 IST
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து சிறையில் அடைக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காரைக்கால் மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக நேற்று ஜனவரி 9ம் தேதி கடலுக்குள் சென்றனர்.
இவர்களில் சிலர் இலங்கையின் கடல் எல்லையில் மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மீனவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் படகுகளுடன் 10 மீனவர்களும் காங்கேசன் துறை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
From
around the
web