தொடரும் இலங்கை கடற்படையினர் அட்டூழியம்... தமிழக மீனவர்கள் 10 பேர் கைது!

தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் சிலர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் இலங்கை தெற்கு மன்னார் அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படை இவர்களை சுற்றி வளைத்தது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்களில் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்து அழைத்துச் சென்றது.
கைதான 10 மீனவர்களும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களிடம் விசாரணை முடிந்தபின் மன்னார் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. மீனவர்கள் இச்செய்தியால் பெரும் கவலையடைந்துள்ளனர். இச்சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!