தமிழக எல்லையில் கடத்தி வரப்பட்ட 100 கிலோ கஞ்சா பறிமுதல்!
தமிழ்நாடு–ஆந்திர எல்லையான ஆரம்பாக்கம் அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட 100 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

எளாவூர் பகுதியில் வாகன தணிக்கை நடைபெற்றபோது, சந்தேகத்துக்கிடமான ஒரு லாரியை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 100 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்குள் கஞ்சா கடத்தி வந்ததாக கூறப்படும் லாரி ஓட்டுநர்கள் மோகன்ராஜ் மற்றும் தனசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
