பரபரப்பு வீடியோ... சினிமாவை மிஞ்சிய பயங்கரம்... 100 முறை பாஜக MLA அலுவலகத்தின் மீது பயங்கர துப்பாக்கிச் சூடு!

உத்தரகாண்ட் மாநிலத்தில் கான்பூரில் எம்.எல்.ஏ உமேஷ் குமார். இவருக்கும் முன்னாள் எம்எல்ஏ-வாக இருந்த குன்வர் பிரணவ் சிங் சாம்பியனுக்கும் இடையே அரசியல் மோதல் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக உமேஷ் குமாரை ஒரு முறைகேடான குழந்தை என்று முன்னாள் எம்எல்ஏ விமர்சனம் செய்தார். இதை கேட்ட அவர் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் கோபமடைந்து, குன்வர் வீட்டின் முன்பாக கோஷம் எழுப்பினர். அப்போது தைரியம் இருந்தால் நேருக்கு நேர் வா என சவால் விடுத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Double engine Sarkar gives constitutional rights to ex BJP MLA, Kunwar Pranav Singh Champion and his henchmen to fire at sitting independent MLA Umesh Sharma in broad daylight on Republic Day. Kudos to to India for double engine governments for the BJP pic.twitter.com/ye4n817BWN
— Roahan Mitra (@rohansmitra) January 27, 2025
இந்நிலையில் 26ம் தேதி அன்று முன்னாள் எம்எல்ஏ குன்வர் அவருடைய ஆதரவாளர்களுடன் கையில் துப்பாக்கியுடன் உமேஷ் குமார் அலுவலகத்திற்குச் சென்று அவருடைய ஆதரவாளர்களை தாக்கினர். அத்துடன் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியைக் கொண்டு அலுவலகத்தை நோக்கி சராமாரியாக சுட்டனர். இதில் 70 குண்டுகள் அலுவலகத்தில் உள்ள சுவர்களை துளைத்தது. இதில் யார் மீதும் குண்டுகள் பாயவில்லை. இந்த தாக்குதலில் எம்எல்ஏ-வின் உதவியாளர் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது
இதைத்தொடர்ந்து குன்வர், தனது ஆதரவாளர்களுடன் வந்து, நெஞ்சை நிமிர்த்தியபடி நடந்து சென்றார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் உமேஷ் குமார் சம்பவ இடத்திற்கு சென்றனர். தனது அலுவலகத்தின் மீது துப்பாக்கி சூடு நடத்தியதால், உமேஷ் குமார் பெரும் கோபமடைந்தார் அவரும் ஒரு துப்பாக்கியை எடுத்துக்கொண்டு குன்வர் வீட்டை நோக்கி நடந்து சென்றார். ஆனால் காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து பாஜக முன்னாள் எம்.எல்.ஏ குன்வர் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!