1000 கிலோ பீடி இலைகள்... இலங்கைக்கு கடத்த முயன்ற போது பறிமுதல்!!

 
பீடி இலைகள் கடத்தல்

தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 1 டன் பீடி இலைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 4 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பீடி இலைகள்

தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு அருகே உள்ள எள்ளுவிளை கடற்கரையில் நேற்று கடலோர காவல் படை இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் கோமதிநாயகம், தலைமை காவலர்கள் மாடசாமி, இராஜேந்திர குமார், மாரியப்பன், செல்வக்குமார், இசக்கி, கற்பகராஜா, கார்த்திகேயன், தங்கம், முனிராஜ்,  பக்ருதீன், குசன், முருகன் உள்ளிட்டோர் கடலோர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பீடி இலைகள் புகையிலை இலங்கைக்கு கடத்தல் கடத்தி வேன்

அப்போது, இலங்கைக்கு கடத்துவதற்க்காக இருந்த சுமார் 30 கிலோ எடை கொண்ட 37 பீடி பண்டல்களில் 1110 கிலோ பீடி இலைகள் மற்றும் கடத்தல்காரர்கள் பயன்படுத்திய 4 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், பீடி இலைகளை இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்றது தெரியவந்தது. மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web