இஸ்ரோ அசத்தல் சாதனை... 100வது ராக்கெட் GSLV F15 விண்ணில் பாய்ந்தது!

 
இஸ்ரோ100


 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இன்று 100 வது ராக்கெட்டை விண்ணில் செலுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இஸ்ரோவின் 100வது ராக்கெட்டான GSLV F15, NVS-02 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது. இஸ்ரோவின் 100வது ராக்கெட்டான GSLV F15, இன்று ஜனவரி 29ம் தேதி காலை 6.23 மணிக்கு NVS-02 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது.  

இஸ்ரோ

NVS-02 செயற்கைக்கோள் தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணித்து, பேரிடர் காலங்களில் துல்லியத் தகவல்களை தெரிவிக்கும் என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.   ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து, NVS-02 என்ற 2,250 கிலோ எடை கொண்ட வழிகாட்டும் ரக செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்பட்டது.

ராக்கெட் இஸ்ரோ

100வது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க

From around the web