’10ஆம் வகுப்பில் பெயிலான மணமகன்’.. ஆத்திரத்தில் கல்யாணத்தை நிறுத்திய மணமகள்!
உத்தரபிரதேசத்தில் மணமகன் தன்னை விட கல்வியறிவு குறைவாக இருப்பதாக கூறி மணமகள் தனது திருமணத்தை ரத்து செய்துள்ளார். சுல்தான்பூர் மாவட்டத்தில் 28 வயது பெண்ணுக்கு 30 வயது இளைஞரை நவம்பர் 17ம் தேதி திருமணம் செய்ய இருந்தது.ஆனால் கடைசி நிமிடத்தில் மணப்பெண் அந்த நபரை திருமணம் செய்ய மறுத்துள்ளார். மணமகள் பட்டப்படிப்பை முடித்துள்ளார், ஆனால் மணமகன் 10 ஆம் வகுப்பில் தோல்வியடைந்துள்ளார்.
எனவே, 10 ஆம் வகுப்பில் தோல்வியடைந்த மாப்பிள்ளையை திருமணம் செய்யமாட்டேன் என்று மணப்பெண் உறுதியாகத் தெரிவித்துள்ளார். மணமகள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதைத்தொடர்ந்து திருமணம் நிறுத்தப்பட்டதால் மணமகன் வீட்டார் வரதட்சணையாக கொடுத்த நகை மற்றும் பணத்தை மணமகள் வீட்டாரிடம் திருப்பி அளித்தனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!