இன்று சென்னை உட்பட 11 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை!

 
மழை


 தமிழகத்தில்  வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக, சென்னை உட்பட 11 மாவட்டங்களில் இன்று  கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில்  தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

5 மாவட்டங்களில் கன மழை

 அடுத்து வரும் நாட்களில் மேலும் வலுவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தெற்கு வங்கக் கடலின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் மன்னார் வளைகுடா மற்றும் இலங்கை கடற்பகுதியில் ஒரு வளிமண்டல சுழற்சியும் நிலவி வருகிறது. இது, அடுத்து வரும் நாட்களில், படிப்படியாக வலுவடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் இலங்கை கடற்பகுதியில், ஒரு வளி  இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும்  கனமழைக்கு  வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web