பெரும் சோகம்... தீப்பிடித்து எரிந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்... 11 வயது சிறுமி மூச்சுத் திணறலால் பலி!

 
அண்ட்ரா


மத்தியப்பிரதேச மாநிலத்தில்  ரட்லம் நகரில் வசித்து வருபவர் பகவத் மௌரியா. இவரது வீட்டில் இருந்த எலக்ட்ரிக் பைக்கை இரவு சார்ஜ் போட்டு விட்டு தூங்கச்சென்றனர்.இந்த பைக் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இந்த விபத்தில் அவரது பேத்தி 11 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் , பகவத் மௌரியா என்பவர் தனது எலக்ட்ரிக் பைக்கை வீட்டிற்கு வெளியே சார்ஜ் போட்டுள்ளார். அப்போது திடீரென எலக்ட்ரிக் பைக் தீப்பிடித்து எரிந்தது.

அண்ட்ரா


மேலும் மற்றொரு வாகனத்திற்கும் தீ வேகமாக பரவியது. அதிகாலை 2.30 மணிக்கு தீ விபத்து நடந்ததால்  குடும்பத்தினர் யாரும் அதை கவனிக்கவில்லை. அதன் பிறகு தீ முழுவதும் பற்றி எரிந்து  வீட்டிற்குள் புகை மூட்டம் வந்ததால் உடனே எழுந்து தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.  சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால் பகவதி மௌரியாவின் பேத்தி 11 வயது அன்ட்ரா மூச்சு திணறலால் அவதிப்பட்டதால் உடனடியாக அவரை மீட்டு  மருத்துவமனையில் அனுமதித்தனர்.  

அண்ட்ரா

இவர்களுடன்  பகவதி மௌரியா, லாவண்யா ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆன்ரா தனது தாயுடன் தாத்தா வீட்டிற்கு வந்திருந்தார். இவர்கள் ஞாயிற்றுக்கிழமை குஜராத்தில் இருக்கும் அவரது பெற்றோர் இருந்த வீட்டிற்கு திரும்புவதாக இருந்தது.இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web