பத்திரமா இருங்க மக்களே... 121 பேர் எலிக்காய்ச்சலால் பலி... சுகாதாரத்துறை எச்ச்சரிக்கை!
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் ஒவ்வொரு பருவமழையின்போது தொற்றுநோய்கள் அதிக அளவில் பரவி அச்சத்தை ஏற்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே பல்வேறு காய்ச்சலகள் மற்றும் தொற்றுநோய்கள் பரவ தொடங்கின. மேலும் அரிய வகை காய்ச்சலான மேற்குநைல், அமீபிக் மூளைக்காய்ச்சல் உட்பட பல வகையான காய்ச்சல்களும் பரவின. இதற்கு மத்தியில் எலிக்காய்ச்சலும் கேரளாவில் பரவி வருகிறது.
மேலும் எலிக் காய்ச்சலுககு அதிகளவில் உயிர் பலியும் ஏற்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவலை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து அதாவது ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை எலிக்காய்ச்சலுக்கு மற்றும் 121 பேர் பலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1,936 பேர் எலி காயச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மாநிலத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர்.
கேரள மாநிலத்தில் எலி காய்ச்சலுக்கு 2022ல் 93 பேரும், 2023 ல் 103 பேரும் பலியாகியுள்ளனர். இந்த ஆண்டு 8 மாதங்கள் முடிவுறாத நிலையில் 121 பேர் பலியாகிவிட்டனர். அதில் இந்த மாதத்தில் மட்டும் 24 பேர் எலி காய்ச்சலால் உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எலி காய்ச்சல் பாதிப்பு மற்றும் அதனால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கவனமுடனும், விழிப்புடனும் இருக்கும்படி மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!