தங்க பட்டறையில் இருந்து 1.4 கிலோ தங்கம் அபேஸ்.. வடமாநில இளைஞருக்கு வலைவீச்சு!

 
 தங்க கட்டி

நகை பட்டறையில் இருந்து 1.4 கிலோ தங்க கட்டிகளை திருடிய மேற்கு வங்க இளைஞர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை பார்க் டவுனில் உள்ள வால்டாக்ஸ் சாலையில் தங்க பட்டறை நடத்தி வருபவர் ஆதார் அலி. வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இங்கு வேலை செய்கிறார்கள். நேற்று, இந்த தங்க பட்டறையில் பணிபுரிந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சைஃபுல் பியாடா, 1.466 கிலோ தங்க கட்டிகளை திருடிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

சிசிடிவியில் இதை பார்த்த உரிமையாளர் ஆதார் அலி, உடனடியாக யானைகவுனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார், சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் தேடுதல் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். தங்க கட்டிகளை திருடி ஓடிய நபரின் மொபைல் போன் எண்ணை வைத்து போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web