தமிழக மீனவர்கள் 14 பேர் விடுதலை!
![மீனவர்கள் இலங்கை](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/d12eb4a28cf0743fef8cb93562cc3c04.png)
தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து டிசம்பர் 5ம் தேதி 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சுமார் 2000க்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றிருந்தனர். இதில் ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரிட்டோ, பேட்ரிக்நாதன் 2 பேருக்கு சொந்தமான விசைப்படகுகளில் ரிபாக்சன், ராஜபிரபு, அரவிந்த் பாண்டி, ராபின்ஸ்டன், முனீசுவரன், பிரசாந்த், ஆரோக்கியம், பெட்க் நாதன், யோபு, ஜான் எமர்சன், பரலோக மெக்டன் வினித், அருள் பிரின்ஸ்டன், அந்தோணி லிப்சன், நிசாம் ஆகிய 14 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றிருந்தனர். அப்போது, இலங்கை கடற்படையினர் அங்கு ரோந்து வந்தனர்.
எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 14 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். 2 படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து மீனவர்களை இலங்கை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட 14 மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை அபராதத்துடன் விடுதலை செய்து இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு தலா ரூ.50000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராத் தொகையை செலுத்தினால் மீனவர்கள் உடனே விடுதலை செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது .
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!