இன்றும், நாளையும் மதுரை முழுவதும் 144 தடை உத்தரவு!

 
144 தடை


 
தமிழகத்தில் மதுரை மாவட்டம் முழுவதும் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக  மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.  இந்து அமைப்புக்கள் சில திருப்பரங்குன்றம் மலையில் ஒரு சில அரசியல் கட்சியை சேர்ந்த சிலர் மாட்டு கறி சாப்பிட்டதாக குற்றச்சாட்டை எழுப்பினர்.  

144

இந்த விவகாரம் குறித்து   இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்த  நிலையில், மதுரை மாவட்டம் முழுவதும் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக  மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதன் காரணமாக மதுரை மாவட்டத்தில் போராட்டங்கள், தர்ணா, பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

144

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து, இஸ்லாமிய அமைப்புகளுக்கு இடையே அசாதாரண சூழல் நிலவி வருவதால் இந்த  0நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் தடையை மீறி திருப்பரங்குன்றம் கோவில் முன்பு இந்து முன்னணி அமைப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில்  மதுரை மாவட்டம் முழுவதும் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web