இன்று முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு!
தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை ஒட்டி 144 தட்டை உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது. இதனை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிறப்பித்துள்ளார்.
செப்டம்பர் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் தியாகி இமானுவேல் சேகரனாருடைய நினைவு தினம் மற்றும் அக்டோபர் 31ம் தேதி பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை நடைபெறுவதை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று தொடங்கி அக்டோபர் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று ஆகஸ்ட் 31 நள்ளிரவு முதல் அக்டோபர் 31 வரை 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனையடுத்து வெளிமாவட்டத்தை சேர்ந்த வாடகை வாகனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது
. பாதுகாப்பு அச்சுறுத்தல் அல்லது கலவரத்தின் அவசர நிலைகளில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சிஆர்பிசி) பிரிவு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பொது இடத்தில் ஒன்றாக கூடி நிற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!