பட்டாசு புகை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 15 விமானங்கள் தாமதம்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை நகரில் மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிக அளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால், காற்றில் கடுமையான புகை மண்டலம் ஏற்பட்டது. இதன் தாக்கம் மீனம்பாக்கம் விமான நிலைய ஓடுபாதை வரை சென்றது. இதுபோன்ற சூழ்நிலை ஏற்படலாம் என முன்கூட்டியே கருதிய இந்திய விமான நிலைய ஆணையம், கட்டுப்பாட்டு அறையில் கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது.

நேற்று இரவு 7 மணிக்குப் பிறகு, தரையிறங்க வந்த விமானங்களுக்கு உடனடி அனுமதி வழங்கப்படாமல், ஓடுபாதை தெளிவாக தெரிந்தபின் மட்டுமே தரையிறங்க அனுமதிக்கப்பட்டது. அதேபோல் புறப்பட வேண்டிய விமானங்களுக்கும் சிக்னல் தாமதமாக வழங்கப்பட்டது. இதனால், ஐதராபாத், கவுகாத்தி, லக்னோ, மதுரை, டெல்லி, பெங்களூர், டாக்கா உள்ளிட்ட 7 வருகை விமானங்கள் மற்றும் 8 புறப்பாடு விமானங்கள் நீண்ட நேரம் தாமதமாகின.

மொத்தத்தில், பட்டாசு புகை காரணமாக 15 விமான சேவைகள் சிறிதளவு பாதிக்கப்பட்டன. இருப்பினும், எந்தவொரு விமானமும் மாற்று விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்படவோ அல்லது ரத்து செய்யப்படவோ இல்லை. தாமதத்தால் பயணிகள் சிரமப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
