150 குழந்தைகள் மரணம்! 700 பேர் படுகாயம்! 2,200 வீடுகள் சேதம்.. குடிபெயர்ந்த 13,000 பேர்.. கதறும் இந்தோனேஷியா!

 
இந்தோனேசியா

13,000க்கும் அதிகமானவர்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர். சுமார் 2,200 வீடுகளுக்கும் மேலாக இந்த நிலநடுக்கத்தில் சேதமடைந்துள்ளது. இந்தோனேசியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 250யை தாண்டியது. இந்த நிலநடுக்கத்தில் 700க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் பெருமளவு சேதம் அடைந்துள்ளது.  

மேற்கு ஜாவா தீவில்  சியாஞ்சூர் நகரில் 10 கி.மீ. ஆழத்தில் ரிக்டர் அளவில் 5.6 ஆக இந்த நிலநடுக்கம்  பதிவானது.  மக்கள் அலறியடித்து கொண்டு வீடுகளில் இருந்து வெளியே ஓடி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.இதில் ஒட்டுமொத்த நகரமே குலுங்கியது. மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த நிலநடுக்கத்தில் 252 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.  மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இதில்  700க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்தோனேஷியா நிலநடுக்கம்

இது குறித்து  தேசிய தேடுதல் மற்றும் மீட்பு கழகத்தின் தலைவர்  ஹென்றி அல்பியாந்தி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  பாதிக்கப்பட்ட பகுதியில்  கிராமங்களில் உள்ள சாலைகள் சேதமடைந்து உள்ளன. இதனால் மீட்பு பணி  பெரும் சவாலாக அமைந்துள்ளது. 13,000க்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். பல கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. இதில், பெருமளவில் குழந்தைகளே பலியாகியுள்ளனர்.  

இந்தோனேஷியா

அவர்களில் பலர் பள்ளி செல்லும்  குழந்தைகள் . பிற்பகல்  1 மணிக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதால் அவர்கள் பள்ளி கூடங்களில் தான் இருந்தனர். நகர் முழுவதும் மின்கம்பங்கள் சாய்ந்ததில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் தடை செய்யப்பட்டு உள்ளது.  2,200 வீடுகள் சேதமடைந்து உள்ளன. இதுவரை 5,300க்கும் கூடுதலான மக்கள் அரசின் முகாம்களில் பாதுகாப்பு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர் என இந்தோனேசிய பேரிடர் மீட்பு கழகம் தெரிவித்து உள்ளது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web