150 ஆண்டுகள் பழமையான டிராம் சேவை நிறுத்தம்.. மேற்கு வங்க அரசின் அறிவிப்பால் ஷாக்கில் மக்கள்!
கொல்கத்தாவில் 150 ஆண்டுகளாக இயங்கி வந்த டிராம் சேவை நிறுத்தப்படும் என மேற்கு வங்க மாநில அரசு அறிவித்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொல்கத்தாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த டிராம் சேவை 1873-ம் ஆண்டு தொடங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால் தற்போது அதிகரித்து வரும் போக்குவரத்து பிரச்சனை மற்றும் சில காரணங்களால் டிராம் சேவை நிறுத்தப்படுவதாக மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.
இதனை போக்குவரத்து துறை அமைச்சர் உறுதி செய்த நிலையில், கொல்கத்தா மக்கள் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கொல்கத்தாவின் கலாச்சார மற்றும் அடையாள சின்னமாக விளங்கும் டிராம் சேவையை நிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். 150 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட டிராம் சேவையை நிறுத்தக் கூடாது என்றும் கூறப்படுகிறது.
மேலும் சிலர் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இன்றைய அதிவேக உலகில் டிராம் சர்வீஸ் போன்ற மெதுவான போக்குவரத்து தேவையில்லை என்றும் மேற்கு வங்க அரசு சரியான முடிவை எடுத்துள்ளது என்றும் சொல்கிறார்கள். ஆனால் இதுபற்றி கொல்கத்தா டிராம் பயனர்கள் சங்கம் கூறும்போது, உலகம் முழுவதும் 450 நகரங்களில் இந்த டிராம் சேவை உள்ளது, நிறுத்தப்பட்ட 70 நகரங்களில் மீண்டும் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது, அதனால் கொல்கத்தாவில். இந்த சேவையை நிறுத்தக் கூடாது என்றும் கூறியுள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!