60 நிமிடங்களில் 1,575 புஷ்-அப்.. சாதனைகளை குவித்து வரும் 12 பேரக்குழந்தைகளின் பாட்டி!
சாதனையை அடைவதற்கு வயது தடையில்லை என்கிறார்கள். அதை நிரூபிக்கும் வகையில் ஒரு மணி நேரத்தில் 1,500 புஷ்-அப்களை செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார் மூதாட்டி ஒருவர். கனடாவைச் சேர்ந்தவர் டொனகின் வைல்டின். 59 வயதான அவர் கடந்த வாரம் 60 நிமிடங்களில் 1,575 புஷ்-அப்களை முடித்து தனது இரண்டாவது உலக சாதனையை முடித்தார்.
ஒவ்வொரு புஷ்-அப்பிற்கும் புஷ்-அப்பின் அடிப்பகுதியில் 90 டிகிரி முழங்கை வளைவு மற்றும் மேலே தள்ளும் போது முழு கை நீட்டிப்பு தேவைப்படும் நிபந்தனைகளுடன் டொனகின் இந்த சாதனையை அடைந்தார். அவர் ஏற்கனவே புஷ்-அப்களில் உலக சாதனை படைத்திருந்தார். தற்போது அந்த சாதனையை 17 நிமிடங்களுக்கு முன்னதாக செய்து தனது சாதனையை தானே முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். நான் வலுவாக உணர்கிறேன். அடுத்த 17 நிமிடங்களில் அதிக புஷ்-அப்களை முடிக்க இலக்கு வைத்துள்ளேன்." டோனகினுக்கு 12 பேரக்குழந்தைகள் உள்ளனர். “எங்கள் பாட்டி அற்புதம்” என்கிறார்கள்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!