Connect with us

செய்திகள்

உஷார்!! நவம்பர் மாதத்தில் 17 நாட்கள் வங்கிகளுக்கு முழு விவரம்!

Published

on

இந்தியாவில் பண்டிகை காலங்கள் துவங்கி விட்டது. கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின்னர், பல மாநிலங்களில் 100 சதவிகித தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நவம்பர் மாதத்தில் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் மொத்தம் 17 நாட்கள் விடுமுறை விடப்படுகின்றது. வெவ்வேறு மாநிலங்களின் பண்டிகைகளுக்கு ஏற்ப, இந்த விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த விடுமுறை நாட்களைக் கருத்தில் கொண்டு, உங்கள் மாநிலத்தில் சரிபார்த்துக் கொண்டு, உங்களது வங்கி பரிவர்த்தனைகளை சரியாக திட்டமிட்டுக் கொள்ளுங்கள். தொடர் விடுமுறை நாட்கள் வரும் பட்சத்தில், ஏடிஎம் இயந்திரங்களிலும் பண பற்றாக்குறை ஏற்படலாம். கடைசி நேர பதற்றத்திற்குள்ளாகாமல் முன்னதாகவே திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

ரிசர்வ் வங்கியின் விடுமுறை நாட்காட்டியின் படி, வார இறுதி நாட்களைத் தவிர, பண்டிகை விடுமுறைகள் சில உள்ளூர் அல்லது பிராந்திய கிளைகளுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. பொது விடுமுறைகள் மட்டுமே நாடு முழுவதும் உள்ள வங்கிகளால் அனுசரிக்கப்படுகின்றன.

இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களின்படி, நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் இந்த நாட்களில் மூடப்படும்.

நவம்பர் 1 – கன்னட ராஜ்யோத்சவா (பெங்களூரு/இம்பால் மாநிலங்களில் மட்டும் விடுமுறை)
நவம்பர் 3 – நரக் சதுர்தசி (பெங்களூரில் விடுமுறை)
நவம்பர் 4 – தீபாவளி (இந்தியா முழுவதும் பொது விடுமுறை)
நவம்பர் 5 – விக்ரம் சம்வத் புத்தாண்டு/கோவர்தன் பூஜை (அகமதாபாத், பேலாபூர், பெங்களூரு, டேராடூன், காங்டாக், ஜெய்ப்பூர், கான்பூர்,லக்னோ, மும்பை மற்றும் நாக்பூர் மாநிலங்களில் விடுமுறை)
நவம்பர் 6 – லக்ஷ்மி பூஜை (கேங்டாக், இம்பால், கான்பூர், லக்னோ மற்றும் சிம்லா மாநிலங்களில் விடுமுறை)
நவம்பர் 7 – ஞாயிறுக்கிழமை
நவம்பர் 10 – சத் பூஜை (பாட்னா, ராஞ்சியில் விடுமுறை)
நவம்பர் 11 – சத் பூஜை (பாட்னாவில் விடுமுறை)
நவம்பர் 12 – வாங்கலா திருவிழா (ஷில்லாங்கில் விடுமுறை)
நவம்பர் 13 – இரண்டாவது சனிக்கிழமை
நவம்பர் 14 – ஞாயிறுக்கிழமை
நவம்பர் 19 – குருநானக் ஜெயந்தி/கார்த்திக் பூர்ணிமா (அய்சோல், பெலாபூர், போபால், சண்டிகர், டேராடூன், ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி, ராய்பூர், ராஞ்சி, சிம்லா மற்றும் ஸ்ரீநகர் மாநிலங்களில் விடுமுறை)
நவம்பர் 21 – ஞாயிறுக்கிழமை
நவம்பர் 22 – கனகதாசர் ஜெயந்தி (பெங்களூருவில் விடுமுறை)
நவம்பர் 23 – செங் குட்ஸ்னெம் (ஷில்லாங்கில் விடுமுறை)
நவம்பர் 27 – நான்காவது சனிக்கிழமை
நவம்பர் 28 – ஞாயிறுக்கிழமை.
இந்த விடுமுறை நாட்களைக் கருத்தில் கொண்டு, முன்கூட்டியே உங்கள் பரிவர்த்தனை தொடர்பான பணிகளை முடித்துக் கொள்ளுங்கள்.

இந்தியா5 hours ago

இந்திய – பாகிஸ்தான் எல்லையில் பிறந்த ’பார்டர்’.!!

ஆன்மிகம்7 hours ago

இந்த 3 ராசிக்காரர்களுக்கு யோகம் ஆரம்பம்!!

செய்திகள்8 hours ago

மீண்டும் உச்சம் தொட்ட தக்காளி விலை !!

உலகம்9 hours ago

ஆற்று வெள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து!! 31 பேர் பலி!! வைரலாகும் வீடியோ !!

செய்திகள்9 hours ago

ஆதாரை டவுன்லோட் செய்ய எளிதான வழி! இனி பத்திரமா வச்சுகோங்க!!

இந்தியா10 hours ago

ஒரே பள்ளியை சேர்ந்த 107 பேருக்கு கொரோனா!!

குற்றம்10 hours ago

போலீஸ் லத்தியால் தாக்கியதில் பெட்டிக்கடைக்காரர் பரிதாப பலி..!!

சினிமா11 hours ago

கொண்டாட்டத்தில் நக்‌ஷத்திரா! விரைவில் டும் டும் டும்…!

இந்தியா11 hours ago

பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை..!!

அரசியல்11 hours ago

இந்தியா – ரஷ்யா ராணுவ ஒப்பந்தம் கையெழுத்து!

செய்திகள்2 months ago

அட்டகாசமான அதிரடி ஆபர்! துணி வாங்கினால் ஆடு இலவசம்..!!

ஈரோடு4 weeks ago

இன்று 23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

கள்ளக்குறிச்சி2 months ago

குட் நியூஸ்!! இனி தனியார் பள்ளிகளில் இது கட்டாயம்!! இயக்குனர் உத்தரவு!

காஞ்சிபுரம்4 weeks ago

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

கன்னியாகுமரி2 months ago

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை !அதிரடி அறிவிப்பு!

சிவகங்கை1 month ago

அக். 27 மற்றும் 30ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை..!

செய்திகள்2 months ago

பிக் நியூஸ்! தமிழகத்தில் 11 நாட்கள் தொடர் விடுமுறை!

சினிமா2 months ago

கவிஞர் பிறைசூடன் கடந்து வந்த பாதை!

செய்திகள்1 month ago

நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படாது! தமிழக அரசு அதிரடி!

இந்தியா4 weeks ago

ரூ1000 வெள்ள நிவாரணத் தொகை!! முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

Trending