பிரேசிலில் சோகம்...பேருந்து கவிழ்ந்து 17 சுற்றுலா பயணிகள் பலி!

 
பிரேசில்
பிரேசிலில் சலோவா நகர் அருகே பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்த போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் இருந்த மணல்மேட்டில் மோதி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பிரேசிலின் பெர்னாம்புகோ மாகாணம் ப்ரூமாடோ நகரம் சிறந்த சுற்றுலா தலமாகத் திகழ்கிறது. அங்கு சுற்றுலா பயணிகள் 30 பேர் ஒரு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.

சலோவா நகர் அருகே பேருந்து சென்றுக் கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த மணல்மேட்டில் மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்புப் படையினர் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!