பகீர்... 17 வயது மாணவன் கும்பமேளாவிற்கு வெடிகுண்டு மிரட்டல்!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் நடைபெற உள்ள இந்த மகா கும்பமேளா ஜனவரி 13ம் தேதி முதல் பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில், பீகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தில் வசித்து வரும் 17 வயது ராஜேஷ் திவிவெடி என்ற சிறுவன் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் மகா கும்பமேளாவிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளான்.
தனது வகுப்பு தோழனுடன் ஏற்பட்ட பிரச்சனையினால் அவனைப் பழிவாங்க, தனது தோழனின் பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் கும்பமேளாவில் வெடிகுண்டு வைத்து 1,000 பக்தர்களை கொல்லப்போவதாக அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும், அந்த பக்கத்தில் கும்பமேளாவிற்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையிலான படங்களை பதிவிட்டுள்ளார்.இது குறித்து, மேள கொட்வாளி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!