பெரும் சோகம்... விமானமும் ஹெலிகாப்டரும் நேருக்கு நேர் மோதல்... 19 சடலங்கள் மீட்பு!

வாஷிங்டன் ரீகன் தேசிய விமான நிலையம் அருகே பிஎஸ்ஏ ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கிய போது, ராணுவப் பயிற்சி ஹெலிகாப்டரில் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பயணிகள் விமானத்தில் 60 பயணிகள், 4 ஊழியர்கள் பயணித்தனர். ராணுவ ஹெலிகாப்டரில் 3 வீரர்கள் பயணம் செய்தனர்.
Video appears to show Two Aircraft, a Helicopter and Commercial Airliner, colliding earlier at Ronald Reagan Washington National Airport near D.C pic.twitter.com/ZJo0wyGbpp
— OSINTdefender (@sentdefender) January 30, 2025
இந்த விபத்தில் பயணிகள் விமானம் போடோமாக் நதிக்குள் விழுந்தது. இதனைத் தொடர்ந்து, அவசரகால மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். புதன்கிழமை இரவு 9 மணியளவில் விபத்து நடந்த நிலையில், தேடுதல் பணியை வேகப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
இதுவரை 19 சடலங்கள் மீட்கப்பட்டு இருப்பதாக ஹெலிகாப்டர்கள் மூலம் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விபத்தை தொடர்ந்து வாஷிங்டன் ரீகன் தேசிய விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!