4 வயது குழந்தையின் உயிரை பறித்த 19வயது இளைஞர்.. அதிவேகத்தால் நேர்ந்த விபரீதம்!
மும்பையில் 4 வயது குழந்தை மீது 19 வயது வாலிபர் காரை ஏற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்தது. மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் சந்தீப் கவுல் என்ற 19 வயது இளைஞர் தனது காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றார். அப்போது, 4 வயது குழந்தை மீது அவர் மோதினார். விபத்தில் குழந்தை உயிரிழந்தது. வடலா பகுதியில் உள்ள அம்பேத்கர் கல்லூரி அருகே இந்த விபத்து நடந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், "இறந்த குழந்தை ஆயுஷ் லக்ஷ்மன் கின்வாடே என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களின் குடும்பம் நடைபாதையில் வசிக்கிறது. அவரது தந்தை கூலித்தொழிலாளி. விலே பார்லே பகுதியில் வசிக்கும் சந்தீப் கவுல் என்பவர் ஹூண்டாய் க்ரெட்டா காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தினார். இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.
மும்பையில் விபத்துகள் தொடர் கதையாகி வருகிறது. சமீபத்தில், மாநகராட்சியால் இயக்கப்பட்ட மின்சார பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகள் மற்றும் வாகனங்கள் மீது மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர் மற்றும் 42 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!