+2 மாணவிக்கு ஆண் குழந்தை... கதறும் பெற்றோர்... போலீசார் விசாரணை!
தமிழகத்தில் சமீப காலங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் பிளஸ் 2 மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தகவலறிந்த போலீசார், பள்ளி மாணவியின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் மத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.
மாணவிக்கு கடந்த 23ம் தேதி திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து, அவரது பெற்றோர், போச்சம்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மாணவி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதைக் கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து மாணவியை பிரசவத்திற்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிசேரியன் மூலம் மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி கர்ப்பத்திற்கு யார் காரணம் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!