காலையிலேயே சோகம்... குளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு!
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அருகே குளத்தில் மூழ்கி இரண்டு சிறுமிகள் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம், களமாவூர் அருகே உள்ள கன்னக்கோன்பட்டியைச் சேர்ந்த ரவிச்சந்திரன். இவர் தனது குடும்பத்தினருடன் இன்று காலை மாத்தூர் அருகேயுள்ள காளியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது காளியம்மன்கோவில் அருகேயுள்ள கலக்குளத்தில் இவரது மகள்கள் காயத்திரி (14), கவிஸ்ரீ (4) ஆகியோர் இறங்கி உள்ளனர்.
தமிழகம் முழுவதும் சமீபத்தில் பெய்து வந்த மழை காரணமாக குளம் முழுவதுமாக தண்ணீர் நிரம்பி இருந்துள்ளது. அதனால் குளத்தின் ஆழம் தெரியாமல் இறங்கிய இரண்டு சிறுமிகளும் பரிதாபமாக குளத்தில் நீரில் மூழ்கி உள்ளனர். சிறுமிகளின் அலறல் சப்தம் கேட்டு உடனிருந்தவர்கள் பதறியடித்தப்படியே இருவரையும் உடனடியாக குளத்தில் இருந்து மீட்டு கீரனூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
சிறுமிகளைப் பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மாத்தூர் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு குடும்பத்தோடு வந்திருந்த நிலையில், இருசிறுமிகளும் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!