நீலகிரியில் புதிதாக 2 ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கம்!

 
 தலைமை செயலகம்

நீலகிரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைப்பு செய்யும் முயற்சியாக, குந்தா மற்றும் பந்தலூர் என்று இரண்டு புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கித் தமிழ்நாடு அரசு முதல்கட்ட அரசாணையை வெளியிட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மறுசீரமைப்புக்காக அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உதகை நீலகிரி

உருவாக்கப்பட்டுள்ள புதிய ஒன்றியங்கள் விவரம்: தற்போதுள்ள உதகமண்டலம் ஊராட்சி ஒன்றியத்தைப் பிரித்து குந்தா ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி உதகமண்டலம் ஊராட்சி ஒன்றியத்தில் 26 கிராம ஊராட்சிகளும், புதிய குந்தா ஊராட்சி ஒன்றியத்தில் 12 கிராம ஊராட்சிகளும் இடம்பெற்றுள்ளன. (உதகமண்டலம் ஒன்றியத்தில் முன்பு 38 கிராம ஊராட்சிகள் இருந்தன.)

தேயிலை விவசாயி ஊட்டி கொடைக்கானல் நீலகிரி

தற்போதுள்ள கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தைப் பிரித்து பந்தலூர் ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 9 கிராம ஊராட்சிகளும், புதிய பந்தலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 13 கிராம ஊராட்சிகளும் இடம்பெற்றுள்ளன. (கூடலூர் ஒன்றியத்தில் முன்பு 22 கிராம ஊராட்சிகள் இருந்தன.)

இந்த அறிவிப்பு தொடர்பாக, பொதுமக்கள் தங்கள் கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகள் ஏதேனும் இருந்தால், அவற்றை 6 வார காலத்திற்குள் தெரிவிக்குமாறு அரசு அறிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!