அதிர்ச்சி... பள்ளி மாடியில் இருந்து குதித்து +2 மாணவர் தற்கொலை... !

 
அஜய்


தமிழகத்தில்  கரூர் மாவட்டம் வடிவேல் நகரில் வசித்து வருபவர்  ராஜேந்திரன். இவரது மகன் 17 வயது அஜய்.  இவர் நாமக்கல் அடுத்த கூலிப்பட்டி பகுதியில் உள்ள சைதன்யா  தனியார் பள்ளியில் +2 படித்து வந்தார்.

கரூர்

பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த இவர், நேற்று மாலை வழக்கம்போல வகுப்பு முடிந்ததும் விடுதிக்கு சென்றிருந்தார்.  மாலை 6 மணிக்கு  விடுதியின் 2 வது மாடிக்கு சென்று அங்கிருந்து திடீரென கீழே குதித்துள்ளார். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

ஆம்புலன்ஸ்

 இதன் பிறகு  மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மாணவன் அஜய் உயிரிழந்துள்ளான். இது குறித்து நாமக்கல் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web