இன்று இரவு டமால்... டூமில்... 20 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு... பத்திரம் மக்களே!!
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நவம்பர் 16 ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது
தமிழகத்தில் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.மேலும், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!