தொடர் விடுமுறை... திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 20 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்... !

 
திருப்பதி விரைவு தரிசன டிக்கெட் பெற புதிய நடைமுறை!!


 திருப்பதி ஏழுமலையான் கோவில்  உலக பிரசித்தி பெற்றது. தற்போது இந்தியா முழுவதும் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில்  திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் சுமார் 20 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.  

திருப்பதி
வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் ஒரேநாளில் 73,301 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 26,242 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன்காரணமாக திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பி வழிகின்றன.  

திருப்பதி குடை வெங்கடாஜலபதி பெருமாள்

இதனால் எம்பிசி அலுவலக பகுதி வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
இன்று அதிகாலை முதல் திருமலையில் பனிமூட்டத்துடன் சாரல் மழையும் பெய்து வருகிறது . அதனை பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.   சுமார் 20 மணிநேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசிக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 5 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web