அடேங்கப்பா! 200 கோடி பட்ஜெட்! வெப் சீரிஸில் களமிறங்கும் நயன்தாரா!

 
அடேங்கப்பா! 200 கோடி பட்ஜெட்! வெப் சீரிஸில் களமிறங்கும் நயன்தாரா!

கோலிவுட், டோலிவுட், சாண்டல்வுட் என எல்லார் மனசிலும் நம்பர் ஒன் நாயகியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. கோடிகளில் சம்பளத்தைத் தொட்டுக் காட்டிய முதல் ஹீரோயின் நயன் தான். சிம்பு, பிரபுதேவா என் அடுத்தடுத்து சறுக்கல்கள் விழுந்தாலும் அதெல்லாம் மனசுல ஏற்பட்ட கீறல்கள் தான் என தன்னுடைய பெர்சனல் வாழ்க்கையையும் சரி செய்து கொண்ட கெத்து வேறு எந்த ஹீரோயின்களாலும் நினைச்சுக் கூட பார்க்க முடியாத பக்குவப்பட்ட சாதனை தான்.

விஷயம் அது கிடையாது. பாகுபலி 1,2 எல்லாம் கோடிகளில் வசூலைக் குவித்த சாதனை உலகறியும். தமன்னா, அனுஷ்காவை எல்லாம் அணுஅணுவாய் ரசித்த ரசிகர்கள், ரம்யா கிருஷ்ணன் போர் காட்சிகளில் வில்லேந்தியதைக் காண, தற்போது முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

அடேங்கப்பா! 200 கோடி பட்ஜெட்! வெப் சீரிஸில் களமிறங்கும் நயன்தாரா!

யெஸ்.. ராஜமாதா சிவகாமி தேவியின் வீரம், துணிச்சல், தலைமைப்பண்பு எல்லாம் பாகுபலியில் பார்த்தாயிற்று. இந்நிலையில், சிவகாமி தேவியின் இளவயது வாழ்க்கையை வெப் சீரிஸுக்காக 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில், 9 எபிசோடுகளை கொண்ட இந்த வெப் சீரிஸில் இளம் வயது சிவகாமிதேவியாக நடிக்க சமந்தா தான் முதல் ஜாய்ஸாக இருந்ததாம். க்ளாமர் தூக்கலாக இருப்பதால் சமந்தா சைலண்ட் மோடுக்கு போனதால், அடுத்து நயன்தாரா யெஸ் சொல்லி விட்டார்.

அடேங்கப்பா! 200 கோடி பட்ஜெட்! வெப் சீரிஸில் களமிறங்கும் நயன்தாரா!

தன்னுடைய முதல் வெட் சீரிஸ் அதகளமாக இருக்க வேண்டுமென விரும்பும் நயன், இளமை துள்ளலோடு தயாராகி வருகிறார். காஷ்மோரா’, ‘சைரா நரசிம்ம ரெட்டி’ போன்ற படங்களில் நயன்தாரா இளவரசியாக நடித்திருந்தாலும் இந்த வெப் சீரிஸில் இன்னும் ஒரு ஸ்டெட் கீழிறங்கி நடிக்கிறார் என்கிறார்கள். வெப் சீரிஸ்களுக்கு சென்சார் எல்லாம் கிடையாது என்பதாலும், இந்தி ரசிகர்கள் மத்தியிலும் இந்த வெப் சீரிஸ் ரீச் ஆகும் என்பதால் நயனின் ஹோம் வொர்க் எல்லாம் பலமாக இருக்கிறதாம்.

From around the web