சென்னை முழுவதும் 20500 போலீசார் பாதுகாப்பு... கடலில் குளிக்க தடை... புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கடும் கட்டுப்பாடுகள்!

 
புத்தாண்டு

நாளை நள்ளிரவு பாதுகாப்பான  புத்தாண்டு கொண்டாட்டத்தை உறுதி செய்யும் வகையில் சென்னை மாநகர காவல்துறை கடும் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.அதன்படி புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் 19,000 போலீசார், 1,500 ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 20,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  
வழிபாட்டுத் தலங்கள், பொது இடங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணித்து குற்றத் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

புத்தாண்டு

புத்தாண்டையொட்டி சென்னையில் பொது இடங்கள், குடியிருப்பு பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு இரவில் சென்னை முழுவதும் 425 இடங்களில் வாகன தணிக்கைக் குழு ஏற்படுத்தப்படும்.
முக்கிய சாலைகளில் வாகன பந்தயத்தை தடுக்க 30 கண்காணிப்பு சோதனைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு வழிமுறைகள் 

புத்தாண்டு
அடுக்குமாடி குடியிருப்புகளில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி பெற வேண்டும். 
புத்தாண்டையொட்டி டிசம்பர் 31 மாலை முதல் ஜனவரி 1 வரை கடலில் குளிக்கவோ, இறங்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. 
மெரினா, சாந்தோம், பெசன்ட் நகர், நீலாங்கரையில் கண்காணிப்பு பணிகள் நடைபெறும். 
கடலில் யாரும் மூழ்கிடாமல் தடுக்க காவல் துறை, உயிர்காக்கும் பிரிவினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!! 

From around the web