தவெக மாநாடு நடத்த 21 கேள்விகள்... .புஸ்ஸி ஆனந்துக்கு நோட்டீஸ்!
தமிழகத்தில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை பிப்ரவரியில் நடிகர் விஜய் தொடங்கி வைத்தார். அவர் 2026ம் ஆண்டு நடக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் விஜய் கட்சி சார்பில் பிரம்மாண்ட மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. அதற்கு முறையான அனுமதி கிடைக்கப்படவில்லை என்ற தகவல்களும் வருகின்றன. இந்நிலையில் ஆகஸ்ட் 22ம் தேதி சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சிக்கான கொடியையும் கொடி பாடலையும் நடிகர் விஜய் அறிமுகப்படுத்தினார்.
கட்சிக்கொடி வெளியீட்டிற்குப் பிறகு அனைவரது பார்வையும் விஜய் கட்சியின் மாநாடு மீது தான் இருந்து வந்தது. திருச்சி, சேலம், தஞ்சாவூர், விக்கிரவாண்டி என தமிழகத்தின் பல இடங்களின் தேர்வு நடைபெற்று வந்தது. இந்நிலையில் முதல் அரசியல் மாநாட்டினை விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் செப்டம்பர் 23ம் தேதி நடத்த திட்மிட்டுள்ளார். மாநாடு நடைபெறுவதற்கு 85 ஏக்கர் நிலப்பரப்பு தேர்வு செய்யப்பட்டு மாநாடு நடத்த அனுமதி கோரி ஆகஸ்ட் 28ம் தேதி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
அனுமதி கேட்டு மனு கொடுக்கப்பட்டு தற்போது 6 நாட்களை கடந்த நிலையில் விழுப்புரம் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் விக்கிரவாண்டி காவல் உதவி ஆய்வாளர் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்து 21 கேள்விகள் அடங்கிய நோட்டீஸை தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுசெயலாளர் புஸ்சி ஆனந்துக்கு அனுப்பியுள்ளார்.
இந்தக் கடிதத்தில் உள்ள கேள்விகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் விளக்கமளித்த பிறகு மாநாட்டிற்கான அனுமதி அளிக்கப்படுமா என்பது குறித்த தகவல்கள் தெரியவரும். மாநாட்டிற்கு அனுமதி வழங்குவதில் நீண்ட இழுபறியானது நிலவி வருகிறது. ஏற்கனவே மாநாட்டிற்கான அனுமதியை விழுப்புரம் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் ஆராய்ந்து தெரிவிப்பார் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி தவெக மாநாடு குறித்து காவல்துறையால் கேட்கப்பட்ட 21 கேள்விகள் இதோ...
மாநாடு எந்த நேரம் தொடங்கி எந்த நேரம் முடியும்?
நிகழ்ச்சிகளின் விபரம் என்ன?
மாநாடு நடக்கும் இடத்தின் உரிமையாளரிடம் பெற்ற அனுமதி கடிதம்.?
மாநாட்டில் கலந்து கொள்ளும் முக்கிய நபர்களின் பட்டியல்.?
எத்தனை நாற்காலிகள் போடப்படுகின்றன.?
எத்தனை பேனர்கள் அலங்கார வளைவுகள் வைக்கப்பட உள்ளன.?
பந்தல் ஒலிபெருக்கி ஒப்பந்ததாரர் பெயர் என்ன?.
எத்தனை நபர்கள் கலந்து கொள்வார்கள்?. ஆண், பெண், முதியவர்கள் விபரம் என்ன?
எந்தெந்த மாவட்டத்திலிருந்து யாருடைய தலைமையில் வருவார்கள்?,
எத்தனை வாகனங்கள் என்னென்ன வகையில் வருகின்றன?.
வாகன நிறுத்தத்திற்கான ஏற்பாடு மற்றும் அவ்விடத்தின் உரிமையாளர் பெயர் விபரம் குறித்த தகவல்கள்?
வாகனம் நிறுத்துமிடத்தில் பாதுகாப்பு பணிக்கென உள்ள தனியார் பாதுகாவலர்களின் பெயர் பட்டியல் விவரம்.?
மாநாட்டில் கலந்து கொள்ளும் பெண் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன?.
குடிதண்ணீர், கழிப்பிட வசதிகளுக்கு என்ன ஏற்பாடு?
உணவு பொட்டலங்கள் மூலம் உபயோகிக்கப்படுகிறதா அல்லது சமையல் கூட மூலம் சமைத்து விநியோகப்பட உள்ளதா?.
தீ விபத்து ஏற்படுமாயின் தவிர்க்கப்பட எடுத்துள்ள நடவடிக்கை என்ன?.
மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ் ஏற்பாடு என்ன?.
மாநாட்டில் உள்ளே, வெளியே செல்லும் வழித்தடம் என்ன?.
முக்கிய நபர்கள் மற்றும் தலைவர்கள் உள்ளே செல்லும் வழித்தடம் என்ன?.
மின்சாரம் எந்த வகையில் எடுக்கப்படுகிறது?.
வாகன நிறுத்தங்களின் வழித்தடம் என்ன?
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!