21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஜெயலலிதாவின் நகைகள் தமிழகம் வருகை!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இவர் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அந்த வகையில் 2004ம் ஆண்டு நடத்தப்பட்ட சொத்து குவிப்பு வழக்கில் 27 கிலோ நகைகள் 1562 ஏக்கர் நிலப்பத்திரம் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என கர்நாடகா அரசுக்கு பெங்களூரு நகர நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி பிப்ரவரி 14, 15 தேதிகளில் அந்த நகைகள் ஒப்படைக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் அனைத்து பொருட்களும் மதிப்பீடு செய்து அனுப்ப வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் 21 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயலலிதாவின் நகைகள் மீண்டும் தமிழகத்திற்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!