ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக 22வயது இளம்பெண்! குவியும் பாராட்டுக்கள்!

 
ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக 22வயது இளம்பெண்! குவியும் பாராட்டுக்கள்!


தமிழகத்தில் விடுபட்ட மாவட்டங்களுக்கு அக். 6 மற்றும் 9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 9 மாவட்டங்களில் பதிவான ஓட்டுகள் அக் 12ம் தேதி எண்ணப்பட்டன.

ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக 22வயது இளம்பெண்! குவியும் பாராட்டுக்கள்!


வெற்றிபெற்றவர்களில் 139 பேர் மாவட்ட கவுன்சிலர்கள், 982 பேர் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர்கள் பதவியிடங்களை திமுக கைப்பற்றியது. பஞ்சாயத்து தலைவர் தேர்தலிலும் அநேக இடங்களில் தி.மு.க. வெற்றி வாகை சூடியது. வெற்றி பெற்ற மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் அனைவரும் அக். 20 ம் தேதி புதன்கிழமை பதவி ஏற்றனர்.


மாவட்ட பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய பெருந்தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடத்தப்பட்டது. அதன்படி நெல்லை மானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய பெருந்தலைவர் பதவிக்கான தேர்தலில் 19வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் 22 வயது இளம்பெண் ஸ்ரீலேகா.

ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக 22வயது இளம்பெண்! குவியும் பாராட்டுக்கள்!

இவர் ஒன்றிய பெருந்தலைவர் பதவிக்கு வேட்பு மணு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் ஸ்ரீலேகா போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்த இளம் வயதில் அரசியல் வெற்றிவாகை சூடி பதவியேற்றுக்கொண்ட அவருக்கு கட்சி சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.

From around the web