சென்னையில் 10 மாதத்தில் 229 வெடிகுண்டு மிரட்டல்கள்... இன்டர்போல் உதவியுடன் குற்றவாளியைத் தேடும் போலீசார்!
இந்த ஆண்டு இதுவரை கடந்த 10 மாதங்களில் சென்னையில் மட்டும் 229 வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதில் தொடர்புடைய நபரை கண்டறிய சர்வதேச போலீசாரின் (இன்டர்போல்) உதவி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.முன்பு ஒருமுறை என்ற நிலை இருந்த நிலையில், தற்போது தினசரி வெடிகுண்டு மிரட்டல்கள் விடப்படும் அளவிற்கு இது பரவலாகியுள்ளது. டிஜிபி அலுவலகத்துக்கே நேரடியாக மின்னஞ்சல் அனுப்பி, பள்ளிகள், கல்லூரிகள், விமான நிலையங்கள், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள், நடிகர்கள், நடிகைகள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பிரபலங்களின் வீடுகளில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல்கள் விடப்படுகின்றன.

இதில் தலைமைச் செயலகம், ஆளுநர் மாளிகை, மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்களும் விதிவிலக்கல்ல. சமீபத்தில் அண்ணாசாலையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்திற்கும் இதேபோல் மிரட்டல் மின்னஞ்சல் வந்தது. இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் போலீசார் விரைந்து சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர்.தொடர்ந்து இவ்வாறான பொய்மையான மிரட்டல்களால் போலீசார் தினமும் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், மிரட்டல் விடப்பட்ட இடங்களில் பணியாற்றும் ஊழியர்களும் அச்சத்துடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மிரட்டல்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து ‘டார்க் வெப்’ மூலமாக அனுப்பப்படுவதால் குற்றவாளியை அடையாளம் காண்பது போலீசாருக்கு கடினமாகியுள்ளது. இதனையடுத்து சர்வதேச போலீசாரின் உதவியுடன் மின்னஞ்சல் அனுப்பியவரை கண்டறியும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.சென்னையில் தற்போது வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றுவதற்காக நான்கு சிறப்பு போலீஸ் அணிகள் மற்றும் நான்கு மோப்ப நாய்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.சென்னையில் 10 மாதத்தில் 229 வெடிகுண்டு மிரட்டல்கள்... இன்டர்போல் உதவியுடன் குற்றவாளியைத் தேடும் போலீசார்!

இந்த ஆண்டு இதுவரை கடந்த 10 மாதங்களில் சென்னையில் மட்டும் 229 வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதில் தொடர்புடைய நபரை கண்டறிய சர்வதேச போலீசாரின் (இன்டர்போல்) உதவி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்பு ஒருமுறை என்ற நிலை இருந்த நிலையில், தற்போது தினசரி வெடிகுண்டு மிரட்டல்கள் விடப்படும் அளவிற்கு இது பரவலாகியுள்ளது. டிஜிபி அலுவலகத்துக்கே நேரடியாக மின்னஞ்சல் அனுப்பி, பள்ளிகள், கல்லூரிகள், விமான நிலையங்கள், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள், நடிகர்கள், நடிகைகள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பிரபலங்களின் வீடுகளில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல்கள் விடப்படுகின்றன.
இதில் தலைமைச் செயலகம், ஆளுநர் மாளிகை, மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்களும் விதிவிலக்கல்ல. சமீபத்தில் அண்ணாசாலையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்திற்கும் இதேபோல் மிரட்டல் மின்னஞ்சல் வந்தது. இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் போலீசார் விரைந்து சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர்.
தொடர்ந்து இவ்வாறான பொய்மையான மிரட்டல்களால் போலீசார் தினமும் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், மிரட்டல் விடப்பட்ட இடங்களில் பணியாற்றும் ஊழியர்களும் அச்சத்துடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.மிரட்டல்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து ‘டார்க் வெப்’ மூலமாக அனுப்பப்படுவதால் குற்றவாளியை அடையாளம் காண்பது போலீசாருக்கு கடினமாகியுள்ளது. இதனையடுத்து சர்வதேச போலீசாரின் உதவியுடன் மின்னஞ்சல் அனுப்பியவரை கண்டறியும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.சென்னையில் தற்போது வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றுவதற்காக நான்கு சிறப்பு போலீஸ் அணிகள் மற்றும் நான்கு மோப்ப நாய்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
