24 மணி நேரமும் தேநீர் கடைகள் செயல்படலாம்… உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வசித்து வரும் பஷீர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் நான் டீக்கடை வைத்து நடத்தி வருகிறேன். போலீசார் இரவு 11 மணிக்குள் டீக்கடையை மூட வேண்டும் என வற்புறுத்துகின்றனர். எனவே அதற்குப் பிறகும் டீக்கடையை தொடர்ந்து நடத்த அனுமதி வேண்டும் என வலியுறுத்தி அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் 24 மணி நேரமும் டீக்கடைகள் செயல்படலாம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது 11 மணிக்குள் டீக்கடையை மூட வேண்டும் என வற்புறுத்துவது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
அத்துடன் போலீசார் இரவு 11:00 மணிக்கு டீக்கடையை மூட வேண்டும் என நிர்பந்திப்பது ஏற்புடையது அல்ல என கூறியுள்ளனர். மேலும் டீக்கடையை தொடர்ந்து 24 மணி நேரம் நடத்தலாம் என்ற அரசாணை இருப்பதால் அதன்படி நடத்தலாம் எனக் கூறியுள்ளனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!