தோவாளை மலர் சந்தையில் மல்லிப்பூ கிலோ ரூ.2,500..உச்சம் தொட்ட பூக்களின் விலை!

 
மலர் பூ மார்க்கெட் சந்தை

பழையன கழிதலும், புதியன புகுதலும் எனும் விதிக்கேற்ப வீட்டில் உள்ள பழைய பொருட்களை மட்டுமல்லாமல் மன இருளையும் அகற்றும் விதமாக தமிழகத்தில் தைப் பொங்கலை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பூக்களின் விலை எகிறியுள்ளது. பொங்கலுக்கு தேவையான பூ, மஞ்சள், இஞ்சி, தோரணம் அனைத்தும் வரலாறு காணாத விலை உயர்வை பெற்றுளன. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை மலர் சந்தை மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தச் சந்தைக்கு தோவாளை, ஆரல்வாய்மொழி, காவல் கிணறு, புதியம்புத்தூர், மாடநாடார் குடியிருப்பு பகுதிகளில் இருந்து பிச்சிப்பூவும், மானாமதுரை, மதுரை, கொடைரோடு, திண்டுக்கல், சங்கரன் கோவில், ராஜபாளையம் பகுதிகளில் இருந்து மல்லிகைப் பூவும் வந்து சேருகின்றன.

பூக்கள்
சேலத்தில் இருந்து அரளி, பெங்களூரூவில் இருந்து மஞ்சள் கேந்தி, பட்டர் ரோஸ், திருக்குறுங்குடி, அம்பாசமுத்திரம், தென்காசி, புளியங்குடி பகுதிகளில் இருந்து பச்சை, துளசி போன்றவையும், ஆரல்வாய்மொழி, தோவாளை, ராஜாவூர், மருங்கூர் பகுதிகளில் இருந்து கோழிப்பூ, அரளி உள்ளிட்ட பூக்களும் தினமும் விற்பனைக்கு வருகின்றன. இங்கிருந்து தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கு மட்டுமல்ல  இந்தியா முழுவதும் பூக்கள் அனுப்பப்படுகின்றன. எனவே தோவாளை சந்தை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

பூக்கள்

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இங்கு பூக்கள் வரத்து குறைவாக உள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக சந்தைக்கு பூக்களின் வரத்து குறைந்திருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். அதே நேரம் தேவை அதிகமாக உள்ளதால் பூக்களின் விலை கிடு கிடு உயர்வை சந்தித்து உள்ளது. நேற்று கிலோ ரூ 2,500-க்கு மல்லிப்பூ விற்பனையானது. இது போல் பிச்சி பூ ரூ.1,750 ரூபாய்க்கும், முல்லை ரூ.1,200-க்கும் விற்பனையானது. அரளி கிலோ ரூ.450ஆகவும், ரோஜா ரூ.260 ஆகவும் விலை அதிகரித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web