போராட்டத்தில் ஈடுபட்ட 25,000 ரயில்வே ஊழியர்கள்.. மொத்தமாக முடங்கிய ரயில் சேவை!

 
வங்கதேச ரயில் ஊழியர்கள்

கடந்த ஆண்டு, வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது. இதன் விளைவாக, பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதைத் தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சியில் உள்ளது.

மும்பை பயணிகள் ரயில்

இதற்கு மத்தியில், சம்பள உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்குள்ள ரயில்வே ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

எனவே, போராட்டக்காரர்களுடன் இடைக்கால அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.

இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் சுமார் 25,000 ரயில்வே ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். எனவே, ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டு, பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web