25 படுக்கைகளுடன் தீக்காய சிறப்பு உள்நோயாளிகள் பிரிவு தொடக்கம்!

 
மருத்துவமனை
 


 
 தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் புத்தாடைகள், பட்டாசுகள், பட்சணங்கள் வாங்க கடைகள் நிரம்பி வழிகின்றன. இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தீக்காய சிறப்பு உள் நோயாளிகள் பிரிவை தொடங்கி வைத்தார்.  
கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிப்பது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.இதனை  மருத்துவக் கல்லூரி மாணவிகள் சார்பில் தீபாவளி விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீபாவளி தீக்காய சிறப்பு உள் நோயாளிகள் பிரிவை  தொடங்கி வைத்து இது குறித்து மா.சுப்பிரமணியன் “ முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தீபாவளியை முன்னிட்டு இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நீட் தேர்விலிருந்து விலக்குப் பெறுவதே மாநில அரசின் நிலைப்பாடு – அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தற்போதைய காலகட்டத்தில்  பட்டாசு வெடித்து ஏற்படும் பாதிப்பு என்பது தொடர்ச்சியாக குறைந்து வருகிறது.
கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை தனியார் மயமாக மாற்றப்படுகிறது என்கிற செய்தியில் சிறிதும் உண்மை இல்லை, சமூக வலைத்தளங்களில் தவறாக பரப்பிவிடப்படுகிறது.  
பட்டாசு வெடிக்கும் பொழுது இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் செய்யக்கூடியவைகள் செய்யக்கூடாதவைகள் என  மா.சுப்பிரமணியன் அறிவுரை  ஒவ்வொரு ஆண்டும் தீக்காயம் சிறப்பு சிகிச்சை பிரிவு ஒன்று தொடங்கி வைக்கப்படும்.  அந்த வகையில் இன்று தீபாவளி தீக்காய சிறப்பு நோயாளிகள் பிரிவு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு பிரிவில் ஆண்களுக்கு 12 படுக்கைகளுடன் ஒரு பிரிவும், பெண்களுக்கு 8 படுக்கைகளுடன் ஒரு பிரிவும் குழந்தைகளுக்கு ஐந்து படுக்கைகளுடன் என மொத்தமாக 25 படுக்கை வசதிகள் உள்ளன. இந்த தீவிர சிகிச்சை பிரிவு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது, தீபாவளிக்காக பிரத்தியேகமாக தொடங்கி வைக்கப்பட்டது.  தீக்காய சிகிச்சைக்காக அண்டை மாநிலங்களிலிருந்தும் நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2000 பேர் வரை  தீக்காய நோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள், முதல்வர் வழிகாட்டுதலோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தீபாவளி நேரங்களில் பட்டாசு வெடித்து ஏற்படும் பாதிப்பு என்பது தொடர்ச்சியாக குறைந்து இருக்கிறது. இந்தாண்டும் இரண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்  நடத்தப்பட்டது.

குழந்தைகள், நோயாளிகள், வயதான முதியவர்கள் இருக்கும் இடத்தில் பட்டாசுகள் வெடிக்கக் கூடாது.
செல்லப் பிராணிகள் அருகில் பட்டாசுகள் வெடிக்கக் கூடாது.
பட்டாசுகளை கையில் வைத்து கொளுத்தக் கூடாது.
வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுத்துப் பிரித்துப் பார்க்கக் கூடாது,

பட்டாசு
பேண்ட் பாக்கெட்டுகளில் பட்டாசுகளை வைத்துக்கொண்டு மற்றொரு பட்டாசுகளை வெடிக்க கூடாது,
சாதாரண குப்பைகளில் பட்டாசுகளை வெடித்து போடக்கூடாது,
பெரியவர்களின் கண்காணிப்பில் மட்டுமே குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க  வேண்டும்.
குழந்தைகள் தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்க கூடாது.
பட்டாசு வெடிக்கும் பொழுது அருகில் ஒரு வாளியில் தண்ணீரை வைத்துக்கொண்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
இளைஞர்கள் பட்டாசு வெடிக்கும் பொழுது செல்பி எடுக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.  
 கடந்த 3 ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் உயிரிழப்புகள் எதுவும் இருக்கக் கூடாது என்பதற்காக பல்வேறு வசதிகளை ஏற்பாடு செய்திருக்கிறோம் எனக் கூறினார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web