29 வயது நடிகைக்கு பாலியல் தொல்லை... புகாரின் பேரில் சீரியல் நடிகர் கைது!
தனியே வசித்து வந்த 29 வயதான இளம்நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வந்ததாக கன்னட தொலைக்காட்சி நடிகர் சரித் பாலப்பா மீது நடிகையின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் நடிகர் சரித் பாலப்பாவைக் கைது செய்துள்ளனர்.
கன்னட மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் இளம் நடிகை அளித்த பாலியல் துன்புறுத்தல் புகாரின் பேரில் நடிகர் சரித் பாலப்பா கைது செய்யப்பட்டார்.
கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் பிரபல நடிகர் சரித் பாலப்பா மீது இளம்நடிகை ஒருவர் ராஜராஜேஸ்வரி நகர் காவல் நிலையத்தில் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து துணை காவல் ஆணையாளர் (மேற்கு) எஸ். கிரிஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”புகாரளித்த அந்த நடிகை 2017ம் ஆண்டு முதல் கன்னட மற்றும் தெலுங்கு தொடர்களில் நடித்து வருகிறார். 2023ம் ஆண்டு நடிகர் சரித்துடன் அவருக்கு தொடர்பு ஏற்படுகிறது.
அப்போது இருந்து தொடர்பில் இருக்கும்படி நடிகையை அவர் தொடர்ந்து வற்புறுத்தி வந்திருக்கிறார். அந்த இளம் நடிகைக்கு மன உளைச்சல், உயிருக்கு அச்சுறுத்தல், கொலை மிரட்டல் போன்றவற்றையும் நடிகர் விடுத்துள்ளார்.
நடிகை தனியாக வசித்து வந்த நிலையில், அவருடன் உடல் ரீதியாகவும் தொடர்பு ஏற்படுத்தி கொள்ள வற்புறுத்தி இருக்கிறார். கூட்டாளிகளுடன் சென்று பணம் கேட்டும் மிரட்டிய சரித், நடிகையின் பாலியல் செயல்கள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனைத்து சமூக ஊடகங்களிலும் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியும் இருக்கிறார்.
தனக்கு அரசியல்வாதிகள், அடியாட்களுடன் தொடர்ப்பிருப்பதாகவும், நினைத்தால் உடனே சிறையில் தள்ளி விடுவேன் என்றும் அச்சுறுத்தி வந்ததாக நடிகை தனது புகாரில் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து புதிய குற்றவியல் சட்டங்களின் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலப்பாவை கைது செய்தனர்” என்றார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!