வாயுக்கசிவு ஏற்பட்ட தனியார் பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை!

 
திருவொற்றியூர்
சென்னை திருவொற்றியூரில் கிராமத்தெருவில்  விக்டரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி  என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில்  6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை  1500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.  இந்த பள்ளி கட்டிடத்தின் 3வது தளத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை  மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். அதற்கு எதிர் தளத்தில் ஆய்வுக்கூடமும் உள்ளது.இந்நிலையில் வாயு கசிவு ஏற்பட்ட திருவொற்றியூர் தனியார் பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ச்சியாக 3 நாட்கள் ஆய்வு செய்து இந்த வாரத்தின் இறுதியில் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக  தனியார் பள்ளிகள் இயக்குனரகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனிடையே மாசு கட்டுப்பாட்டு வாரியம் சமர்ப்பித்த முதற்கட்ட அறிக்கையில் வாயு கசிவுக்கான எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   

 தமிழகத்தின் தலைநகர் சென்னை திருவொற்றியூர் பகுதியில் செயல்பட்டு வருகிறது   விக்டரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி. இந்தப் பள்ளியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் மாணவர்களுக்கு கண் எரிச்சல், மூச்சுவிட சிரமம், வாந்தி, மயக்கம் போன்ற உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டன. இந்த திடீர் வாயுக்கசிவால் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டதை அடுத்து அந்த பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

 

திருவொற்றியூர்

தீபாவளி, தொடர் விடுமுறை என 10 நாட்களுக்கு பின் நேற்று பள்ளி திறக்கப்பட்ட நிலையில் மீண்டும் 8 மாணவர்களுக்கு வாந்தி உள்ளிட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்நிலையில்,  பெற்றோர்கள் பள்ளி முன்பாக கூடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. மறு அறிவிப்பு வரும் வரை பள்ளி மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.  

 


இந்நிலையில், திருவொற்றியூர் விக்டரி பள்ளியில் வாயுக்கசிவு தொடர்பாக மாசு கட்டுபாட்டு வாரியம் ஆய்வு நடத்தி வருகிறது.  நவீன சாதனங்களைக் கொண்டு காற்றின் தரம் குறித்து பரிசோதனையில் ஈடுபட உள்ளனர். வாயுக்கசிவு ஏற்பட்டு மாணவிகள் மயங்கி விழுந்ததால் பள்ளி மூடப்பட்டுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web