பதுக்கிய 3 ராட்சத ஆமைகள் மீண்டும் கடலுக்குள் விடப்பட்டன!

உடனடியாக, கீழுர் அரசு உதவி கால்நடை மருத்துவர் வினோத் அங்கு சென்று ஆமைகளின் உடல்நிலையை பரிசோதித்து அறிந்தார். ஆமைகள் உடல் நலத்துடன் இருப்பது தெரியவந்தது. மேலும், இது பச்சை ஆமை வகையை சேர்ந்தது. இதில் 2 ஆமைகள் தலா 200 கிலோ, ஓர் ஆமை சுமார் 70 கிலோ எடை இருந்தது. இவை உயிருடன் இருந்ததால், உடனடியாக அவற்றை கடலில் விட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் முன்னிலையில், 3 ஆமைகளும் வனத்துறை கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கால்நடை உதவி மருத்துவர் , மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பூங்கா வனவர் , வனப்பாதுகாப்பு படை வனவர் , வனக்காப்பாளர்கள் சுதாகர், மணிகண்டன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், மீனவர்கள் படகு மூலம் 3 ஆமைகளையும் கடலுக்குள் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவு சென்று ஆழமான பகுதியில் கடலில் விட்டனர். இந்த ஆமைகளை பிடித்தவர்கள் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.