பைக் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு... கோவிலுக்கு சென்ற போது சோகம்!

 
விபத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை  ஜோகட்டி கிராமத்தில் வசித்து வருபவர் 40 வயது  நாகராஜ். இவர்   கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ரத்தினம்மா என்ற மனைவியும், நாகேஷ் நவீன் ஆகிய 2 மகன்களும் இருந்தனர். நாகேஷ் 10ம் வகுப்பு படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். நவீன் 7ம் வகுப்பு படித்து வந்தான்.  

ஆம்புலன்ஸ்

கோநாகராஜ் நேற்று தன்னுடைய மனைவி ரத்தினம்மா, இளைய மகன் நவீன்  மூவரும் முத்துராயன்தொட்டியில் உள்ள முத்தப்பா சுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

உத்தரபிரதேச போலீஸ்

நெல்லுமார் அக்ரஹாரம் கிராமத்தில் இருந்து அன்னேமார் தொட்டி கிராமத்துக்கு செல்லும் வழியில் வனப்பகுதியில் சென்ற போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது. இதில் நாகராஜ், அவருடைய மனைவி, மகன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர்.  ஒரே குடும்பத்தில் 3 பேர் பலியான சோகம் ஜோகட்டி கிராமத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

 

From around the web