மினி லாரி கவிழ்ந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் பலி!

 
விபத்து
 

 

கரூர் மாவட்டம் தென்னிலை பகுதியில் நடந்த துயரச்சம்பவத்தில் கல்குவாரியில் இருந்து மணல் ஏற்றி வந்த மினி லாரி கவிழ்ந்ததில் வட மாநிலத்தைச் சேர்ந்த 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

ஆம்புலன்ஸ்

சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் தென்னிலை கல்குவாரியில் இருந்து எம்-சான்ட் ஏற்றி வந்த மினி லாரி கரூர் நோக்கி வந்தது. கரூர்-தென்னிலை சாலையில் கடைவீதி அருகே சென்றபோது, திடீரென ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் லாரி சாலையோரம் கவிழ்ந்தது. இதில் தொழிலாளர்கள் சிக்கந்தர், பிரபாகரன், அஜய் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

போலீஸ்

மினி லாரி ஓட்டுநர் சந்திரகுமார் மற்றும் கிளீனர் ஜேம்ஸ் கடுமையாக காயமடைந்த நிலையில், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த தென்னிலை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!