10 நாட்களில் 37 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை... !
பாகிஸ்தானில் கடந்த 10 நாட்களாக ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாவட்டத்தில் நடந்துவரும் ராணுவ நடவடிக்கையில் கடந்த 10 நாள்களில் 37 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 14 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவான இன்டர்-சர்வீஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ்(ஐஎஸ்பிஆர்) செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் கைபரின் தீரா பகுதியில் ஆகஸ்ட் 20 முதல் பாதுகாப்புப் படைகள் விரிவான உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கைகளை நடத்தி வருவதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் நடத்தப்பட்ட சமீபத்திய நடவடிக்கைகளின் விவரங்களில், பயங்கரவாதிகளின் இருப்பிடங்களைக் கண்டறிந்து 12 பயங்கரவாதிகளைக் கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர்.இதில் மொத்தம் இதுவரை 37 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
தற்போது நடைபெற்று வரும் நடவடிக்கைகள் "பயங்கரவாத குழுக்கள் மற்றும் அவற்றின் துணை அமைப்புகளுக்கு பெரும் பின்னடைவை" ஏற்படுத்தியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. ஐஎஸ்பிஆர்யின் கூற்றுப்படி, இப்பகுதியில் அமைதி திரும்பும் வரை இந்த நடவடிக்கை தொடரும். தொடர்ந்து பயங்கரவாதிகள் கண்டுபிடித்து அவர்கள் வேரோடு அழிக்கப்படுவார்கள் என பாதுகாப்புப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!