நாளை தவெக 3ம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியீடு!

நடிகர் விஜய்யின் தவெக 2026 சட்டமன்ற தேர்தலை பணிகளை விறுவிறுப்பாக்கி வருகிறது. இதன் அடிப்படையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அரசியல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி, தவெக தனது கட்சியை வலுப்படுத்தவும் , கட்சிப் பணிகளை விரைவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, 234 சட்டமன்றத் தொகுதிகளை 120 கட்சி மாவட்டங்களாகப் பிரித்துள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாவட்டச் செயலாளர், ஒரு இணைச் செயலாளர், ஒரு பொருளாளர், இரண்டு துணைச் செயலாளர்கள் மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்கள் அடங்கிய நிர்வாகிகள் குழு அமைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ஜனவரி 24ம் தேதி கோவை, சேலம், ஈரோடு உட்பட 19 கட்சி மாவட்டங்களுக்கான பட்டியலை அக்கட்சி அறிவித்தது. இதை தொடர்ந்து ஜனவரி 29ம் தேதி நேற்று புதன்கிழமை சென்னை, மதுரை உட்பட மேலும் 19 மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்கள் மற்றும் இதர நிர்வாகிகளை நியமிப்பதாக நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அறிவித்தது.
இந்நிலையில், தவெக மாவட்ட செயலாளர்கள் நியமனம் தொடர்பான 3 வது பட்டியல் நாளை ஜனவரி 31ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே 2 கட்டங்களாக 38 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!