சென்னை விமான நிலைய எஸ்கலேட்டரில் விரல்கள் சிக்கி 3 வயது குழந்தை காயம்!
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நகரும் படிக்கட்டில் சிக்கியதால் 3 வயது குழந்தை காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி தங்கள் இரு குழந்தைகளுடன் ஜெய்ப்பூர் செல்ல சென்னை விமான நிலையத்துக்கு வந்திருந்தனர். அவர்கள் நகரும் படிக்கட்டில் (எஸ்கலேட்டர்) மேலே சென்று கொண்டிருக்கும்போது, எதிர்பாராதவிதமாக 3 வயது குழந்தையின் கை விரல் படிக்கட்டின் ஓரத்தில் சிக்கிக் கொண்டது.
அந்த சிறுவன் வலி காரணமாக அலறியதும், அருகில் இருந்த பயணிகள் மற்றும் விமான நிலைய பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக எஸ்கலேட்டர் நிறுத்தப்பட்டு, குழந்தை மீட்கப்பட்டது. பின்னர் விமான நிலைய மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக குழந்தை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. சம்பவம் காரணமாக அந்த குடும்பம் திட்டமிட்டிருந்த ஜெய்ப்பூர் விமானப் பயணத்தை ரத்து செய்தது.

இந்த சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
