துக்க விருந்தில் சாப்பிட்ட 4 பேர் பலி... ஒரே மாதத்தில் அடுத்தடுத்து மரணங்கள்!

 
சத்தீஸ்கர்

சத்தீஸ்கார் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தின் துங்கா கிராமத்தில் துக்க நிகழ்வில் கலந்து கொண்டோர் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஊரில் ஒருவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து இறுதிச்சடங்கு நடைபெற்றது. பின்னர், வழக்கம்போல் அவரது வீட்டில் விருந்து அளிக்கப்பட்டது.

அந்த விருந்தில் உணவு உட்கொண்ட பலருக்கும் சிறிது நேரத்தில் வாந்தி, பேதி உள்ளிட்ட உடல்நலக்குறைவுகள் ஏற்பட்டன. அவர்களில் சிலர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஊர்மிளா என்ற 25 வயது இளம்பெண், தனது 2 மாத குழந்தையுடன் பரிதாபமாக உயிரிழந்தார்.

டெல்லி போலீஸ்

அதேபோல், இதே நிகழ்வில் உணவு உண்ட பிறரும் தொடர்ந்து உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் புதாரி (25), புத்தாராம் (24), லக்கே (45) ஆகியோர் ஒரு வார இடைவெளிக்குள் உயிரிழந்தனர். இந்த மரணங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதால் கிராமத்தில் அச்சம் நிலவுகிறது. உணவில் விஷச்சேர்க்கை ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!