ஆன்மீக சுற்றுலா சென்ற இடத்தில் விபரீதம்.. ஆன்மீக தலைவர் உட்பட நால்வர் நிலச்சரவில் சிக்கி பலி..!
Nov 18, 2023, 18:45 IST
அருணாசல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஆன்மிக தலைவர் உள்ளிட்ட 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஆன்மிக தலைவர் உள்ளிட்டோர் அருணாசல பிரதேசத்தின் மேல் சுபன்சிரி மாவட்டத்தில் உள்ள டம்போரிஜோவில் மூன்று நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இட்டாநகர் நோக்கி வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இவர்களுடைய வாகனம் கம்லே மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மண்ணில் புதைந்தது.
இந்த சம்பவத்தில் ஆன்மிக தலைவர் உள்ளிட்ட 4 பேர் பலியாகினர். நிகழ்விடத்துக்கு விரைந்த காவல்துறையினர், நேற்றிரவு சடலங்களை இடிபாடுகளில் இருந்து மீட்டனர். தொடர்ந்து அவற்றை உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அருணாசலில் நிலச்சரிவில் சிக்கி ஆன்மிக தலைவர் உள்ளிட்ட 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
From
around the
web