ரகளையில் ஈடுபட்ட 4பேர் கைது... ஆயுதம் பறிமுதல்!

 
கைது
 

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்ட 4பேரை போலீசார் கைது செய்தனர்.  

தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே 4 பேர் கொண்ட கும்பல் கையில் ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்டு வருவதாக தென்பாகம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன் பெயரில் சப் இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 4 பேரையும் சுற்றி வளைத்து அவர்களிடம் இருந்த வாளை பறிமுதல் செய்தனர். 

விசாரணையில் அவர்கள் மேல சண்முகபுரம் வண்ணார் முதல் தெருவை சேர்ந்த சங்கர் மகன் விஜி என்ற விஜயகுமார் (25), சுந்தரலிங்கம் மகன் நிதிஷ்குமார் (26), பொன் நகரத்தைச் சேர்ந்த ரஞ்சித் மகன் ததேயூஸ் ராஜா (19), பிரையன்ட் நகர் 2வது தெருவை சேர்ந்த முத்துராஜ் மகன் சஞ்சய் (19) என்று தெரியவந்தது. அவர்கள் 4 பேரையும் இன்ஸ்பெக்டர் திருமுருகன் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?